விஜய் ஆண்டனியின் நடிப்பில் மாஸாக உருவாகி உள்ள சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி . தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இசைத்துறையில் பிரமான இவர் இன்று தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வருகிறார் .
Also Read : புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்..!!
நடிகராக 24 படங்கள் வெற்றிகரமாக நடித்து அதில் வெற்றி கண்ட இவரது நடிப்பில் தற்போது 25 ஆவது படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.அதன்படி விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சக்தித் திருமகன்’ எனப் பெயரிடப்பட்ட நிலையில்,தற்போது படத்தின் டீசர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.