பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியலை நடத்தி வருவதாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பிரிவினைவாதி என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது :
மிடில் கிளாஸ் மாதவன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராம் தாக்கல் செய்து நாட்டில் உள்ள நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நாடு போற்றும் பட்ஜெட்டை வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
Also Read : சட்டவிரோத குடியேறியவர்களை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா..!!
சீமான் குண்டு வச்ச பாபாவை அப்பா என்றும், காஷ்மீர் பிரிவினை வாதத்தை ஆதரித்தும் பேசி வருவதால் அவர் ஒரு பிரிவினைவாதி. ஜோசப் விஜய் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியலை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷனரி விஜய்யை முதல்வராக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
விஜயின் அரசியல் என்பது சினிமா படம் போல தான், அவர் இன்னொரு கமல்ஹாசன் போல அரசியலில் மாறுவார். மத்திய அரசின் பட்ஜெட் பற்றி எல்லாம் பேசுவதற்கு விஜய்க்கும், அவருடைய ரசிகர்களுக்கும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.