கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் லியோ திரைப்படம் வெற்றி பெறவேண்டி மேஜிக் ஓவியமாக நடிகர் விஜய்(vijay) உருவத்தை வரைந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்(vijay) நடிக்கும் லியோ திரைப்படம் வெற்றி அடைய வேண்டி ஓவியர் செல்வம் அவர்கள் “மேஜிக் ஓவியமாக” ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் விஜய் உருவத்தை கண்ணுக்கு தெரியாதபடி வரைந்து பின் அந்த டப்பாவில் பௌண்டோ(bounto) குளிர் பணத்தை ஊற்றும்போது பௌண்டோ குளிர்பானத்தின் கருமை நிற வண்ணம் அந்த டப்பாவில் மறைந்திருக்கும் நடிகர் விஜயின் உருவத்தை பளிச்சென்று மேஜிக் ஓவியமாக ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொது மக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஓவியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.