குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் அஸ்வின்.ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஆதித்ய வர்மா, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.மேலும் பெண் ரசிகைகள் இவருக்கு கிடைத்தனர்.
சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின்”என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 40 கதைகளை கேட்டு தூங்கியதாக பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி நெட்டிசன்கள் ட்ரோல் மற்றும் கமெண்ட் செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த செம்பி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்பொழுது இவருக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.