பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை எதிர்த்து சென்னையில் உள்ள திரையரங்குகளின் முன்பு விஜய்யின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கீ.வீரலட்சுமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரபல வலைதள ஊடகமாக இருப்பது i tamil. இந்த ஊடகத்தின் நெறியாளர் லோகு சுஜி அவர்கள் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலக்ஷ்மி உடன் அண்மையில் நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது நெறியாளர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
நடிகர் விஜய்யின் உருவ பொம்மை எரிக்கப்படும் என வீரலட்சுமி எதிர்த்து வீடியோ பதிவிட்டது ஏன் ..? என்ன காரணம்?என்று கேட்டார்.
இதற்க்கு பதில் அளித்த அவர் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து உள்ளனர்.
மேலும் தங்களது இச்சைக்கு இணங்க மறுத்த 17 வயது சிறுமியிடம் இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நபர்கள் ,சமூகவலைத்தளங்கள் என பரப்பி விடுவதாக மிரட்டல் விட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.இந்த நிலையில் மீட்கபட்ட சிறுமி 60%தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த தகவலை அறிந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி அந்த சிறுமியை நேரில் பார்வையிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதால் தனது கோரிக்கையை நிறைவேற்ற சிறுமி வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து வீரலக்சுமி, பேசியதை வீடியோ பதிவில் பார்க்கலாம்.