விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர் (vijay’s party name) குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் தோன்றி மக்கள் நலத்திட்ட உதவிகளையும், மறைமுகமாக அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் ஊடாக நடிகர் விஜய் செய்யும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : dmk mps protest : பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – dmk mps போராட்டம் நடத்துவர்- முதல்வர் அதிரடி
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து விஜய் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிக்கு 3 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இதில் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் பெயரை (vijay’s party name) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று வெளியாக வாய்ப்பு என தகவல்!
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.