விழுப்புரம் அருகே உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவர் தாக்கப்பட்டசம்பவம் தொடர்பான விசாரணையில் 3பேர் அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அடுத்த கோடியனுர் கூட்டு சாலையில் உணவகம் ஒன்று செல்யப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மேல்பாதி கிராமத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
அப்போது மது போதையில் வந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உணவகத்தில் கலியமூர்த்தி அமரும் போது இளைஞர்கள் நாற்காலியை நகர்த்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த முதியரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கோடியனுர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கவத்துறையினர் விசாரணைக்காக 3பேரை அழைத்து சென்றுள்ளனர்.அப்போது காவல் துறையினர் பாரபட்சம் காட்டவதாக கூறி இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் உட்கோட்டம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் இதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாத பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் சிலரை கைது செய்ய முயன்ற பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டது.
அப்போது கடும் கோபம் அடைந்த துணைக்கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய், ”அசம்பாவிதம் எதாச்சி பண்ண வேற மாதிரி கொண்டு போவம்.” என எத்ச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.