பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடைசி நேரத்தில் இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் கொடுத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது . வினேஷ் போகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது; சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத் தலைவரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
Also Read : தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் – கியூபா வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி..!!
பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத்துக்கு உதவ முடியுமா என பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் கொடுத்துள்ளார்.