இந்தூரைச் சேர்ந்த ரோஹித் சௌஹான் என்பவர் விமல் பான் மசாலாவை மேகியுடன் இணைத்து சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தலத்தில் வெளியாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் எதிர்வினை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறான உணவு சேர்க்கைகள் தொடர்ந்து ஆன்லைனில் டிரெண்டுகளில் இடம்பிடித்து வருகின்றன. மேகி ஐஸ்கிரீம், தோசை ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன் பரந்தாஸ் போன்ற சில கலவைகள் நெட்டிசன்களிடமிருந்து பல்வேறு வகையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.
இந்த வினோதமான உணவு சேர்க்கைகளில் இரூலிருந்து நெட்டிசன்கள் மீண்டு வரும் நிலையில், இந்தூரைச் சேர்ந்த ரோஹித் சௌஹான் என்பவர் விமல் பான் மசாலாவை இந்தியாவின் விருப்பமான உடனடி நூடுல்ஸான மேகியுடன் இணைத்து சாப்பிட்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அந்த வீடியோவில் வரும் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்து ஒரு தட்டில் மேகி எடுத்து சாப்பிடுவதற்கு முன் ஒரு சிறிய விமல் பான் மசாலாவை அதில் சேர்க்கிறார். இந்த வீடியோவைப் “டேனே டேனி மே கேசர் கா டம் என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிரமில் பதிவேற்றியுள்ளார்.
Maggi-ல் பான் மசாலாவை கலந்து உண்ட மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியை சேர்ந்த ரோகித் சவுஹான்! வீடியோ இணையத்தில் வைரல் pic.twitter.com/zdaQTBSEJS
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) June 14, 2022
3 மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்த வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசங்கள் மக்களுக்கு புற்றுநோயைக் கொடுக்கக்கூடிய ஒரு மூர்க்கத்தனமான செய்முறையை காட்டுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.