15 வது ஆசிய கோப்பை தொடர் நாளை மறுநாள் சனிக்கிழமை துபாயில் ஆரம்பிக்கவுள்ளது . இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை அந்தந்த அணிகள் தற்போது வெளியிட்டுள்ளன. தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது போட்டி நடைபெரும் நாடான ஐக்கிய அரபு அமிரகத்துக்கு சென்றுள்ளன. புதன் கிழமையான நேற்று ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி துபாய் சென்றடைந்தது. இதனை தனது டிவிட்டர் பக்கதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வீரர்கள் சந்திப்பு :
இந்தியா ,பாகிஸ்தான்,ஆப்னிகானிஸ்தான் அணிகள் பயிற்சி எடுக்க துபாயில் உள்ள மைதானத்துக்கு சென்றடைந்தன. அங்கு பல்வேறு நெகிழ்ச்சியான செயல்கள் அரங்கேறியுள்ளன. மைதானதின் உள்ளே நுழைந்த பின்னர் இந்திய வீரர்கள் ஆப்னிகானிஸ்தான் வீரர்களோடு கைக்குலுக்கி கொண்டனர். இந்தியா வீரர்களான சஹால், ஹர்திக் பாண்டிய ஆகியோர் ஆப்னிகானிஸ்தான் வீரர்களான நபி, ரஷீத் கானோடு ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரஷீத் கானிடம் நலம் விசாரித்தார். இந்தியா-பாகிஸ்தான் :
இதை விட சுவாரஸ்யமான நிகழ்வும் நடந்துள்ளது, கிரிக்கெட் உலகில் பரம எதிரியாக பார்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் நட்பு பாராட்டி கைக்குலுக்கி கொண்டனர். இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றாள் இந்திய வீரர் விராட் கோலி பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அஸாமிடம் கைக்கூடுத்து பேசினார். சில நொடிகள் அவர்கள் அங்கு நின்று கைக்கூடுத்து பேசிக்கொண்டனர். இந்த நிகழ்வை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் காணொலியாக பதிவிட்டு டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கோலி-பாபர் அஸாம் :
இந்தியாவில் விராட் கோலி எப்படி கொண்டாடபடுகிறாரோ அதே போல் பாகிஸ்தானில் பாபர் அஸாம் பார்க்கப்படுகிறார். கோலியை போன்றே பந்தை எதிர்கொள்ளும் வீரர் பாபர். அவரை கோலியின் ஆட்டத்திரன், விளையாடும் முறை, தலைமை பண்பு, ரன்கள் குவிக்கும் விதம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பல கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கோலி கிரிக்கெட்டில் அடைந்த உயரத்தை வரும் காலங்களில் அடைய கூடிய வீரர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இதே போல ஆப்கனிஸ்தான் வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களோடு நட்பு பாராட்டினார், பயிற்சி மைதானத்தில் இருநாட்டு வீரர்களும் ஒன்றாக தொழுகையில் ஈடுபட்டனர். இந்த காணொலி சமூக ஊடகத்தில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. கலத்தில் பெரும் எதிரியாக பார்க்கப்படும் வீரர்கள் வெளியே நட்பு கொள்வது பெரும் நெகிழ்வாக பாராட்டு பெற்றுள்ளது. இது நாடுகளின் நட்புறவை மேம்படுதும் செயலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Video Link : https://twitter.com/i/status/1562455671396012034
Link : https://twitter.com/i/status/1562760827291463680