மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று ( 3rd phase of Lok Sabha election ) வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுசேரியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது . இதையடுத்து கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது .
Also Read : டி20 உலகக்கோப்பையின் இந்திய அணிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்தது பிசிசிஐ..!!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு பதிவின் போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், ( 3rd phase of Lok Sabha election ) அங்கு 25 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.