பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை (Department of Transport )உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு கட்டணமில்லா புதிய பேருந்து வசதி வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதுபோன்று கல்லூரி மாணவர்களும் கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்யலாம் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ,சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்காத நிலையில் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை(Department of Transport)எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு ராமநாதபுர மாவட்டத்தில் “இலவச பஸ் பாஸ்’ எடுத்து வர மறந்த மாணவியை கதறவிட்டு, அபராதம் விதித்த அதிகாரிகளின் செயல், மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.