விசாரணைக்காக நேரில் ஆஜராக பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் சோனு சூட். பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாக நடித்து வரும் இவருக்கு தற்போது பஞ்சாப் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
Also Read : இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சரே – கொதித்தெழுந்த அண்ணாமலை..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் சோனு சூட் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
அதன்படி, வரும் 10-ம் தேதிக்குள் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், வாரண்டை நிறைவேற்றியதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.