தென் கொரியாவில் தனது உயிர் நண்பருக்கு உதவ சென்றவருக்கு அந்நாட்டு அரசு கொடுத்துள்ள தண்டனை அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் கொரியாவில் இருக்கும் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சி எடுக்க வேண்டும் என்பது அந்நாட்டின் முக்கிய சட்டங்களில் ஒன்று . இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதால் அந்நாட்டில் இருக்கும் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : அடுத்த சம்பவத்திற்கு தயாராகுங்கள் மக்களே – நாளை உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்..!!
இந்நிலையில் கட்டாய ராணுவ பணியில் இருந்து தப்புவதற்காக அதிகமாக உணவு உட்கொண்டு 3 மாதங்களில் உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை அளித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அவரின் நண்பருக்கும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.