Jaguar Land Rover car in Tamil Nadu : இந்தியாவிலேயே முதல் முறையாக டாடா மோட்டார்ஸின் பிரபலமான சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
மேலும் இத்திட்டத்திற்காக அந்நிறுவனம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாடு சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதையும் படிங்க : வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு – பரபரப்பு சம்பவம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலை ரூபாய் 9000 கோடி முதலீட்டுடன் புதிதாக அமைக்கப்படவுள்ளது.
புதிதாக அமைய உள்ள இந்த ஆலையில், டாடா மோட்டார்ஸின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிக்கப்பட உள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜாகுவார் லேண்ட்ரோவர் (ஜே.எல்.ஆர்.) கார்கள் பிரிட்டனில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுவை ஆகும்.
இனிமேல் ஜே.எல்.ஆர். கார்கள் முழுவதுமாக இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த ஜே.எல்.ஆர். கார்கள் சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சென்னை, ராணிப்பேட்டையில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையில் ஆரம்ப கட்டமாக ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ராணிப்பேட்டை தொழிற்சாலையில் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற சொகுசு கார்களும் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன Jaguar Land Rover car in Tamil Nadu.
இதையும் படிங்க : முதல்வர் ஸ்டாலின் முதல் கமல் வரை வாக்களித்த அரசியல் தலைவர்கள்!