2 முறை பிரதமராக இருந்த நரேந்திர மோடி தற்போது 3 ஆவது முறையாக பிரதமராகி உள்ள நிலையில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து 3 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 8 ஆம் தேதி பிரதமர் மோடி ரஷியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த விளாடிமிர் புடின் இருநாடுகள் உறவு குறித்து நீண்ட நேரம் பேசியாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது நிகழ்ந்த சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கிறது.
ஐ.நா.வின் நிர்வாகக் குழுவில் மேற்கத்திய நாடுகள் அதிக அளவில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் அவற்றை சேர்க்கக் கூடாது. இதை எதிர்ப்போம் என்று ரஷ்யா கூறியுள்ளது.
Also Read : யூரோ சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி..!!
விளாடிமிர் புடின், பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய அரச விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருதை வழங்கினார்.
பாதுகாப்பு உபகரணங்களின் உதிரி பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களின் கூட்டு உற்பத்தி மற்றும் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை $100 பில்லியனாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவில் மேலும் ஆறு அணுமின் நிலைய அலகுகளை அமைப்பது குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் ஆலோசித்து வருகின்றன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து துருவ மற்றும் கடல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன தகவல் வெளியாகி உள்ளது.