திமுகவின் பொய்யும், புரட்டும் தேர்தல் நேரத்தில் எடுபடாது. அரசியலில் உதயநிதி அப்படி என்ன (EPS campaigning)சாதித்துவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உதகையில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது :
திமுகவில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது. வாரிசுகளுக்கு தான் பதவி. திமுகவின் பொய்யும், புரட்டும் தேர்தல் நேரத்தில் எடுபடாது. அரசியலில் உதயநிதி என்ன சாதித்துவிட்டார்.
கூடலூர் பகுதியில் செக்சன் 17 நிலப்பிரச்னை, பத்தாயிரம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு பெற முடியாத சூழல் இருந்து வரும் நிலையில், மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றிக்குப் பின், அதிமுக அரசு அமைந்தவுடன், விடிவு காலம் பிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
கூடலூரில் இருந்து சிறியூர் வழியாக சத்தியமங்கலம் செல்வதற்கான சாலை அமைக்கும் பணி 70% நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read : https://itamiltv.com/only-bjp-can-stop-violence-against-women-pm-modi/
கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் இரவு நேர போக்குவரத்து தடையால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; அங்கு இரவு நேர போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு ரயில் நிலையத்திலிருந்து கூடலூர் வழியாக (EPS campaigning) கேரள மாநிலம் நிலம்பூர் வரை மூன்று மாநிலங்களுக்கான இரும்பு பாதை ரயில் சேவை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.