ரஷ்யா உக்ரைன் போர் இன்று வரை இடைவிடாமல் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டிற்கு இது நாள் வரை பல பவகையில் உதவிக்கரம் நீட்டிவந்த அமெரிக்கா தற்போது உக்ரைனை கைவிடும் தருவாயில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ குழுவில் இணைத்துக்கொள்ள முயன்ற உக்ரனை தன்னுடன் தக்க வைக்க ரஷ்யா முயன்ற நிலையில் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் தற்போது இரு நாடுகளுக்கிடையே கடும் போர் நடந்து வருகிறது.
திட்டத்தட்ட உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை பிடித்து விட்ட ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைனியர்களை நசுக்கி வருகிறது . இந்த பக்கம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான படை ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக இதில் நேட்டோ குழுவில் இருக்கும் பல நாடுகள் உதவி செய்து வருகிறது அதில் அமெரிக்கா இன்று வரை பெரும்பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் போருக்குள் நுழைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு தான் இந்த போர் முக்கியமே தவிர இதில் அமெரிக்காவுக்கு லாபம் ஒன்றும் இல்லை என சாடியுள்ள டிரம்ப் அப்படி இருக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக உக்ரைன் போரில் ஏன் ஐரோப்பிய நாடுகள் செலவிடவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.