வாட்ஸ்அப்பில் வந்த புதிய அப்டேட்ஸ்… இனி வாய்ஸ் மெசேஜ்களை (voice messages) பயனர்கள் ஸ்டேட்டஸாக வைக்கலாம்…
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி அது அவசியமான தேவையாக மாறியுள்ளது. இதனால், பயனர்களின் தேவையை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில், புதிதாக வந்திருக்கக்கூடிய அப்டேட் ஒன்றுதான் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் இல் வாய்ஸ் மெசேஜை (voice messages) வைக்கக் கூடிய வசதி.
முன்னதாக, நம்முடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்ய முடியும். ஆனால், தற்போது புதிதாக வந்திருக்கும் இந்த அப்டேட் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேடஸ்-இல் 30 செகண்ட்ஸ் வரையிலான வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்டுகளை வைக்க முடியும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸில் வைக்கக்கூடிய வெப்சைட் லிங்குகளின் முன்னோட்டத்தையும் பார்க்க முடியும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வசதி ஒரு சிலருக்கு அப்டேட் ஆகியுள்ள நிலையில், ஒரு சிலருக்கு அப்டேட் ஆகாமலும் இருக்கலாம் எனவும், கூடிய விரைவில் அனைவருக்கும் இந்த வசதி அப்டேட் ஆகி விடும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.