சனிப்பெயர்ச்சி பற்றி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 17.1. 2023 செவ்வாய்க்கிழமை அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் சனி பகவான் சஞ்சரித்துள்ளார்.
எப்போதும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும், வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இந்த இரண்டு பஞ்சாங்கங்களை வைத்துதான் ஒவ்வொருவரும் தங்களுடைய பலன்களை தெரிந்து கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் முடிவு செய்கின்றனர்.
இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 29. 3.2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அவிட்டம் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்க உள்ளார் சனி பகவான்.
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 27.6.2023 அன்று வக்ரகதி அடைகிறார். தொடர்ந்து, கும்பத்தில் இருந்து வக்ர கதியிலேயே 24.8.2023 அன்று அவிட்டம் இரண்டாம் பாதத்தில் மகர ராசிக்குள் வருகிறார் சனி பகவான். 23.10.2023 அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்ற சனி பகவான் அங்கிருந்து 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குள் செல்கிறார்.
இவை யாவும் பஞ்சாங்கம் நமக்கு வழங்கியுள்ள தகவலாகும். இந்த நிலையில் 29.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாவதை ஏற்றுக்கொள்வதா? ஏற்றுக்கொள்ளாமல் போவதா என்பது ஒரு சில குழப்ப வாதிகளால் அனைவருக்கும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
பொதுவாக, பஞ்சாங்கங்களின் அடிப்படையில் தான் கிரகங்களின் சுழற்சியை நாம் அறிந்து வருகிறோம். அடுத்த ஆண்டு நடக்கப்போகின்ற சூரிய கிரகணத்தையும், சந்திர கிரகணத்தையும் தெளிவாக உரைப்பது பஞ்சாங்கங்கள் தான்.
கிரகப் பெயற்சிகளையும் மிகச்சரியாகத் தெரிவித்து வருவது பஞ்சாங்கங்கள் தான். இந்த பஞ்சாங்கங்களின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 29.3்2023 அன்று தான் சனிப்பெயர்ச்சி.
பொதுவாக சனிபகவான் ஆண்டுதோறும் 4 மாதங்கள் வக்கிரகதிக்கு ஆளாவார். அந்த நேரத்தில் அவர் சஞ்சரிக்கும் இடத்திலிருந்து பின்னோக்கி செல்லவும் செய்வார். அதையும் பஞ்சாங்கங்கள் மிகத் தெளிவாகவே, இந்த தேதியில் இந்த நட்சத்திரத்தின் இந்த பாதத்தில் வக்கிரமடைகிறார்
இந்த நட்சத்திரத்தின் இந்த பாதத்தில் பின்னோக்கிச் செல்கிறார். இந்த தேதியில்
வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த தேதியில் இந்த நட்சத்திரத்தின் இந்த பாதத்தில் சஞ்சரிக்கிறார் என்பதையெல்லாம் கணக்கிட்டு பஞ்சாங்கள் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்று சொல்வது பஞ்சாங்கங்களைப் பின்பற்றி வரும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தகவலாகும்.
இத்தகைய தகவல்களைத் தெரிவிப்பவர்கள் 29.3.2023 அன்று அவிட்டம் 3 ஆம் பாதத்தில் கும்ப ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிக்கிறாரா? இல்லையா என்ற தகவலை மக்களுக்கு தெரிவித்திட வேண்டும்.