துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு (Minister Shekhar Babu) தெரிவித்துள்ளார்.
ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, அடுத்த மாதம் அறுபடை வீடுகள் பயணம் தொடங்க உள்ளதாகவும், அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “நான் கட்சியின் அடிப்படை தொண்டர்களில் ஒருவன். முதல்-அமைச்சர் சொல்வதை நாங்கள் செயல்படுத்துவோம். துணை முதல்-அமைச்சர் பதவி உள்ளிட்ட பெரிய விஷயங்கள் பற்றியெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்” என்று தெரிவித்தார் (Minister Shekhar Babu).