Who owns copyright on songs : காப்புரிமை முடிந்த பிறகும் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் ஏக்கோ மற்றும் அகி இசை நிறுவனங்களின் மீது குற்ற தாக்கல் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை 2019-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர்களிடம் உரிமம் பெற்று, பாடல்களை பயன்படுத்தலாம் என் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க : போபால் IISER கோடைகால இன்டெர்ன்ஷிப் 2024!
இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, எக்கோ மற்றும் அகி இசை நிறுவனங்களுக்கு இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்து, எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதில் அவர்கள் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து நடந்த விசாரணையின் போது எக்கோ நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று நினைப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்க்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பரசரண், ‛‛‛ஆம், அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா” என்று கூறியது உயர்நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இளையராஜா தரப்பு வழக்கறிஞரின் இந்த கருத்து பலராலும் விமரர்சிக்கப்பட்டு வந்தது Who owns copyright on songs.
இதற்கிடையே, எக்கோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் உரிமை தான் மேலானது என்பதே, “ஆமாம் அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா” என்ற எங்கள் தரப்பு விவாதித்தின் பொருள் என விளக்கம் அளித்தார்.