விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திருமாமணி’ மணிவிழா மலர் வெளியீட்டு விழா:
சென்னையில் உள்ள கருத்தியல் கவியரங்கத்தில் ‘திருமாமணி’ மணிவிழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/08/image-533.png?resize=1024%2C461&ssl=1)
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் தமிழ் மணவாளன், கவிஞர் இரவிக்குமார், கவிஞர் தனிக்கொடி, கவிஞர் இனியன், கவிஞர் தேன்மொழி தாஸ், கவிஞர் அருண் பாரதி ,நடிகர் சத்யராஜ் ,வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,நாடாளுமன்றத்தில் ”அல்லாஹூ அக்பர் என்று ஏன் கூறியது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
2022 ஆண்டு நாடாளுமன்றத்தில் திருமாவளவன் உரை:
கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் வலுத்தது.
இதனையடுத்து பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியை இந்துத்துவ மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழங்கியதும், அப்போது அவர்கள் எதிர்த்து நின்று அந்த மாணவியை அல்லாஹு அக்பர் என உறக்க முழங்கிய சம்பவமும் நடைபெற்றது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/08/image-532.png?resize=800%2C457&ssl=1)
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திருமாவளவன் ஹிஜாப் அணியக்கூடாது என தடுப்பது நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, இந்தியர்களை இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பிரிக்கும் முயற்சியை இங்கு நடக்கிறது.சமூகநீதி துறையை பிரித்து ஓபிசி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க தனியே அமைச்சரவை ஒன்றை உருவாக்க வேண்டும்.
ஜெய்ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுபடுத்தலாம் என முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிர்க்குரலாக இந்தியாவில் ஜெய்பீம் என்பதும், அல்லாஹு அக்பர் என்பதும்தான் இன்று மாற்றுக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த அவையில் நான் ஜெய்பீம் அல்லாஹு அக்பர் என முழங்குகிறேன் என பேசியிருந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/08/Screenshot-2023-08-17-163123.jpg?resize=654%2C607&ssl=1)
அல்லாஹூ அக்பர் கூறியது தொடர்பாக திருமாவளவன் விளக்கம்:
பிறந்த நாள் விழாவில் இன்று திருமாவளவன் பேசினார். அப்போது அதிகாரம் இல்லாமல் இருக்ககூடிய எளிய மக்களை அதிகாரமுடையவர்களாக மாற்றுவது தான் விடுதலை சிறுத்தைகளின் அரசியல் நோக்கம்.இஸ்லாமியர் ஓட்டு போடுவார்கள் என்று நான் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என்று சொல்லவில்லை. நீ ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொல்கிறாய்..
அதனால் தான் அல்லாஹு அக்பர் என்று சொல்லுவேன் உன் அரசியல் ஆபத்தானது. மதவெறி அரசியல் திணிப்பை எதிர்த்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்லாஹு அக்பர் என்று கூறி அமர்ந்ததாக தெரிவித்தார். மேலும் அப்போது ஆற்றிய உரை தேர்தலுக்காக அல்ல என்று தெரிவித்த அவர், மீண்டும் ஒரு மாநாட்டை நடத்த இருப்பதாக தெரிவித்தார்