புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழி. இளம் தலைமுறையினர் நாட்டை ஒன்றிணைக்கும் அந்த பணியை சீரான முறையில் செய்வார்கள் என நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து விளக்கம் கொடுத்துள்ள ஜோ பைடன் கூறியதாவது :
அமெரிக்காவை ஒன்றிணைக்க புதிய தலைமுறைக்கு இடம் கொடுப்பதே சிறந்த வழி என முடிவு செய்துள்ளேன்
அடுத்த 6 மாதங்கள் ஒரு அதிபராக எனது பணியைச் செய்வதில் கவனம் செலுத்துவேன் வெறுப்பு தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன்; எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை.
Also Read : பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் இல்லை – அபராதம் போட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்..!!
அமெரிக்கா வலுவாகவும், பாதுகாப்பாகவும், சுதந்திர உலகின் தலைவராகவும் உள்ளது.இங்கு சர்வாதிகாரிகள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. மக்கள்தான் ஆட்சியாளர்கள். அதிகாரம் மக்கள் கையில் உள்ளது.
பொது வாழ்க்கையில் அனுபவம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கும் இங்கு வாய்ப்பு உண்டு என பைடன் தெரிவித்துள்ளார்.