shankaracharyas-அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இதற்கான கோவிலின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும் கட்டப்பட உள்ளது.
மேலும் இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோயில் கட்டுவதற்காக 1800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
Also Read –https://x.com/PTI_News/status/1746535062626345420?s=20d :
இந்த திறப்பு விழாவில் 160 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 25,000 ஹிந்து சாதுக்களும் 136 மடாதிபதிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் மதத் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின்போது ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளதாவது:
“சங்கராச்சாரியார்கள் தங்கள் கண்ணியத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.
இது ஈகோ அல்ல. பிரதமர் ராம் லல்லா சிலையை (குழந்தை ராமர் சிலை) நிறுவும் போது நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
கும்பாபிஷேக விழாவில் மதச்சார்பற்ற அரசு பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல” என்றார்.
Also Read –https://itamiltv.com/thiruvalluvar-in-saffron-controversy-erupted-again-due-to-governor-post/
இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் சங்கராச்சாரியார்(shankaracharyas) சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “கோவிலை இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. முழுமையடையாத கோயிலில் தெய்வத்தை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.
தற்பொழுது இதனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என 4 சங்கராச்சாரியார்களும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.