Goldbond is best investment : வயிற்றுக்கு சோறில்லை என்றாலும் கூட பரவாயில்லை… குண்டுமணி அளவுக்காவது தங்கம் இருக்க வேண்டும் என்பது இந்திய மக்களின் பொதுப்புத்தியாகவே அமைந்துள்ளது.
அதே போல முதலீடு என்று வரும்போதும், அவர்கள் தங்கத்தின் மீதே அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். குடும்ப நிகழ்வுக்காக நகை சேர்ப்பது தொடங்கி, தங்க நகைகளே மக்களின் பொருளாதார நிலையைச் சொல்லும் என்பதால் தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வங்கியில் பணம் செலுத்தினால் அதற்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், தங்கத்தில் சேமிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது, தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.
1980 ல் 10 கிராம் தங்கம் 1,800 ரூபாயாக இருந்தது 1900ல் 3 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்தது. 2010ஆம் ஆண்டில் அதுவே 18ஆயிரத்து 500 ரூபாயாக கிட்டத்தட்ட 6 மடங்கு உயர்ந்தது. 2012ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் அதிகபட்ச விலையாக 31ஆயிரத்து 500 ரூபாயைத் தொட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை குறைந்து 2017ஆம் ஆண்டு 20ஆயிரத்து 500 ரூபாயாக குறைந்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கொரோனா உச்சம் பெற்ற 2020ஆம் ஆண்டில் 49 ஆயிரத்து 500ம், 2021ல் 52ஆயிரம் ரூபாய் வரையும் சென்றது.
இதையும் படிங்க : April 15 Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
தற்போது 10 கிராம் தங்கம், 64ஆயிரத்து 500 ரூபாய் என உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் தற்போதைய அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கையைக் காட்டுவது அமெரிக்காவைத் தான்.
அமெரிக்காவில் பணவீக்க விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பத்திரங்களை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு தங்கத்தின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு $2,250ஐ தாண்டியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு நிலவரத்தை விட 38 சதவீதம் அதிகமாகும். இந்த விலை உயர்வின் எதிரொலிதான் இந்தியாவிலும், தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.
இதே போல் மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் பதற்றமும் தங்கம் விலை அதிகரிக்கக் காரணம் என்கிறார்கள் நிதி வல்லுநர்கள் Goldbond is best investment.
இப்படி தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதனை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தங்க நகையாக வாங்குவதை விட தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்தால் அது முதலீட்டாளர்களுக்கு மிகவும் நன்மைபயக்கும் என்கிறார்கள் முதலீட்டு வல்லுநர்கள்.
தங்க நகையாகவோ, நாணயமாகவோ வாங்கினால் அதற்கு செய்கூலி, சேதாரம் என்று 20 சதவீதம் சென்று விடும். இதுவே தங்க பத்திரமாக வாங்கினால் ஆண்டுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டியும் அளிப்பார்கள்.
4 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்க முடியும். இதற்கு வரி விலக்கும் இருக்கிறது. மேலும் தங்கப்பத்திரம் என்பது 24 காரட் தரத்தில் தங்கம் இருக்கும்.
கிராமுக்கு 50 ரூபாய் வரை விலையும் குறைவு. மேலும் நகைகளை பாதுகாப்பது சிரமம். ஆனால் தங்கப்பத்திரம் தொலைந்து போய்விடும் என்று நாம் அச்சப்படத்தேவையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்..
இதையும் படிங்க : ”பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்கள்..” தமிழகத்தை குறிவைக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்