ஏகே 62 திரைப்படம் கைவிட்ட பிறகு சோகத்திலிருந்த விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நானும் ரவுடி தான் காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.அந்த திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் படம் எடுக்கப் போவதாகத் தகவல்களும் வெளியானது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாரத வண்ணம் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு விக்னேஷ்சிவன் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மேலும் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி கைவிட்டுப் போவதற்குக் காரணம் நயன்தாரா தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஏகே 62 திரைப்படம் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கம் உள்ளதாகத் தகவல் வழியாக உள்ளது. இந்த படத்தின் அப்டேட் குறித்து இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்து தகவல்கள் ஏதும் வெளி
வராத இருந்த நிலையில் தற்பொழுது விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி கூட்டணி வெளியே போவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்பொழுது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும்,
அதில் முக்கிய கதாபாத்திரத்தில் லவ் டுடே இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பு இருப்பதாக இனிமே வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் அஜித் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.