8 நாள் பயணமாக பூமியில் இருந்து விண்வெளி மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்கு திரும்ப 8 மாதங்களுக்கு மேலாகும் என அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளியாகி உள்ளது .
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட இவர்கல் அடுத்தநாள் ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.
9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி இவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலத்தில் நிறைய கோளாறுகள் இருப்பதால் அவர்களால் பூமிக்கு திருப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
8 நாள் பயணமாக விண்வெளி மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மேலும் 8 மாதங்களுக்கு பூமி திரும்ப வாய்ப்பில்லை என அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளியாகி உள்ளது .
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா ஆலோசனை செய்துவருவதாகவும் அதுவரை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.