அரசியல் கட்சிகளில் எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ, குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் நடக்கிறதோ, அங்கே உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி பா.ஜ.க விற்கு வருகிறார்கள் என கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் மற்றும் குடும்ப அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதற்க்கு கடந்த சிலதினங்களுக்கு முன்பு முதலமைச்சர் திமுக குடும்ப அரசியலை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தமிழ் நாட்டில் குடும்ப அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.
தங்களை எதிர்க்கும் கட்சிகளை பாஜக உடைக்கிறது என்ற எதிர்கட்சிகளின் விமர்சனம்; பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் கூட்டணி கட்சியான அதிமுக, திமுக எம்எல்ஏ.க்கள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியைஇந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொது சிவில் சட்டத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்கிறதே?
பொது சிவில் சட்டம் என்பது எல்லா மதங் களுக்கும் ஒரு பொதுவான சட்டம். அது அம்பேத்கர் அவர்களால் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப் பட்ட ஒரு சரத்து. அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் உருவாக்கி வைத்த ஒன்று. இப்போது புதிதாக பாஜகவோ அல்லது பிரதமர் மோடி அவர்களோ சொன்னது அல்ல.
இன்றளவும் பல்வேறு மதங்களில் உள்ள தனிப்பட்ட சட்டங்களில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது வழக்கத்தில் இருக்கிறது. இதனை யெல்லாம் களைய வேண்டுமென்றால் சீர்திருத் ததோடு கூடிய ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவைப் படுகிறது. இதனை அரசியலாக்க வேண்டு மென்று அவர்கள் செயல்படலாம் அதே வேளையில் இந்த சட்டம் குறித்து, ஆழ்ந்த விவாதத்தை முன்னெடுக்கக் கூட பாஜக தயாராக உள்ளது என தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏக்கள் குறித்த உங்கள் மேடை பேச்சு அதிகளவில் விமர்சிக்கப்படுகிறதே?
அந்த பேச்சை நான் தவிர்த்திருக்க வேண்டும். நாகரீகமான, கண்ணியமான பேச்சுகளை முன் வைக்க வேண்டும்; அரசியலில் அதிகளவில் பெண்கள் வர வேண்டுமென நினைக்கக் கூடிய நான், அந்த கூட்டத்தில் இந்தமாதிரியான கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து.
ஆனால் திமுக மேடைகளில் அவர்கள் பேசுகின்ற அந்த வரம்புமீறிய அநாகரீகமான பேச்சோடு என்னுடைய கருத்தை ஒப்பிட்டு பேசுவது என்பதே அநாகரீகம்.எந்தமாதிரியான விமர்சனங்களை அவர்கள் பெண்கள் மீதும் நாட்டை ஆளும் பிரதமர் மீதும் எவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைக்கிறார் கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அவர்கள்மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார், கண்டித் துள்ளாரா? இல்லையே அதனால் அவர்களுடன் என்னை ஒப்பிடுவது தவறு என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடு தான் என்கிறாரே முதல்வர்?
எல்லாருக்கும் குடும்பம் தமிழ்நாடுதான் அதுவல்ல எங்களின் கேள்வி, ஊழல் குறித்து உங்கள் பதில் என்ன? நாங்கள் ஊழல் செய்யாதவர்கள் என்று இவர் களால் சொல்ல முடியுமா? குடும்ப அரசியல் இல்லை என மறுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அதைத்தான் பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார் அதில் என்ன தவறு இருக்கிறது.சொல்கிறார் வானதி சீனிவாசன்திமுகவில் பிளவு ஏற்படுமா என்பது ஸ்டாலின் முடிவைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.