மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த தனது கணவனை எஸ்.பி.அலுவலகத்திற்குத் தோளில் சுமந்து சென்று (woman carries) நீதி கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Shahdol woman carries injured husband on back to SP office after miscreants beat him#MadhyaPradesh #BreakingNews pic.twitter.com/nADlMhwTm1
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 16, 2023
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெனட்லால் யாதவ் என்ற நபர் ஒரு கூலித் தொழிலாளி. ஜெனட்லால் யாதவ் சோஹாக்பூர் பகுதியில் ஹரி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெனட்லால் யாதவ் சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் அவரை வழி மறித்து தாக்கியுள்ளனர்.
மேலும், அவரைத் தாக்கிவிட்டு, ஜெனட்லால் யாதவ் வைத்திருந்த பணத்தையும் அந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இந்நிலையில், காயமடைந்த ஜெனட்லால் சுற்றி இருந்தவர்களால் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ஜெனட்லாலின் மனைவி ராணி யாதவ் சோஹாக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சோஹாக்பூர் காவல் துறையினர் விபின் யாதவ், கம்லி யாதவ் மற்றும் தினேஷ் யாதவ் ஆகிய மூன்று குற்றவாளிகள் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனாலும், சோஹாக்பூர் காவல் துறையினரின் நடவடிக்கையில் ராணி திருப்தியடையவில்லை. இதனால், ஜெனட்லால் யாதவின் மனைவி ராணி தனது கணவரை முதுகில் சுமந்துகொண்டு (woman carries) ஷாஹ்டோலில் உள்ள காவல் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார்.
இந்நிலையில், அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.