பிரதமர் வருகையின்போது பெண்ணைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை (Amar prasad) காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
வரும் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது பிரதமரை வரவேற்பதற்காக ஆட்களை அழைத்து வர அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ஆண்டாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா உள்ளிட்டோர் ஆண்டாள் வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது சகோதரி தேவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த தேவி மற்றும் ஆண்டாள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
இதையும் படிங்க : K.B.Anbalagan -னின் மருமகள் இன்று காலை உயிரிழப்பு!
இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் உள்ளிட்டோர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை(Amar prasad) கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய தனி படை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1750408629126377813?s=20
இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.