32 ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ள மூதாட்டி ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் (Ramar temple) திறப்பு விழா அன்று ‘மௌன விரதத்தை’ முறித்துக் கொள்ள இருக்கிறார்.
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, இந்தக் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேக விழா, நடைபெற உள்ளது.
இதற்காக, கோவில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கும், வெளிநாடுகளில் 7000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமர் கோயிலுக்காக 85 வயது மூதாட்டி ஒருவர் 32 ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. 85 வயது மூதாட்டியான இவரின் கணவர் தேவகினந்தன் அகர்வால், 1986-ஆம் ஆண்டில் உயிரிழந்து விட்டார்.
இதன் பின் சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்ததாகக் கூறப்படுகிறது.
பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சரஸ்வதி தேவி, 1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மௌன விரதம் இருக்கப் போவதாக உறுதி பூண்டுள்ளார்.
அன்று முதல் 2020 வரை தினமும் 23 மணி நேரம் மௌன விரதமும், மதியம் 1 மணி நேரம் பேசிக்கொண்டும் இருந்துள்ளார்.
2020-ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌன விரதம் இருந்துள்ளார். அதிலிருந்து இன்றுவரை சைகை மொழியிலேயே பேசி வருகிறார்.
அது மட்டும் இன்றி ஒரு நாளில் 6 முதல் 7 மணிநேரங்களுக்கு தியானம் செய்வதாகவும், மாலையில் ராமாயணம், பகவத் கீதை போன்ற சமயப் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் ஒரு டம்ளர் பால் குடிப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/hindustani-singer-rashid-khan-shocking-death/
கடந்த திங்கள்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தை தொடங்கியுள்ள சரஸ்வதி, ஜனவரி 22-ஆம் தேதி மௌன விரதத்தை முடித்துக் கொள்ளவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
https://x.com/ITamilTVNews/status/1744972278407012693?s=20
ராமர் கோயில் (Ramar temple) திறப்பு விழாவான ஜனவரி 22-ஆம் தேதியுடன் தனது கனவு நனவாகிவிட்டதாக, 32 ஆண்டு கால ‘மௌன விரதத்தை’ முறித்துக் கொள்ளவுள்ளர்.
இந்த இந்த மூதாட்டியின் ராமர் மீதான அதீத பக்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.