ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள பெண்கள் பொதுவெளியில் பாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டின் போர் காரணமாக அங்கு ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் தற்போது அந்நாட்டை கடும் கட்டுப்பாடுகளுடன் ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கடமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும் பொதுவெளியில் முகம் காட்ட கூடாதது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு போட்டுள்ள்ளது.
Also Read : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு..!!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசவும், பாடவும் தடை விதித்து புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது தாலிபன் அரசு.
பெண்கள் தனியாகவோ, உறவு முறை இல்லாத ஆண்களோடோ பயணிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்திற்கு ஐ.நா. சபை அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .