ஆபாச வீடியோ: தனது குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்த காமுக இளம்பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3வயது குழந்தை உள்பட பெண்களின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.இதுகுறித்து வெளிநாட்டில் திருந்து திரும்பிய குழந்தையின் தந்தை ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க : போலி ஆபாச வீடியோ விவகாரம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த தருமபுரம் ஆதீனம்
விசாரணையின் போது குழந்தையின் தாயாரான இளம்பெண் தான் இந்த ஆபாச வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது குழந்தையின் தாயாருக்கும், ஏரல் புதுமனைத் தெருவை சேர்ந்த ஜார்ஜ் ராஜாவின் மகன் உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாகி உள்ளது.கணவர் வெளிநாட்டில் இருந்ததால், இளம்பெண் உதயகுமாருடன் தனிமையிலும் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உதயகுமார் மற்றும் இளம்பெண் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உதயகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண் கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
பெற்ற தாயே தனது 3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.