சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து காத்திருந்தவர்களுக்கு ஷாக்!

worm in chicken biriyani at star biriyan hotel
Spread the love

ஒசூர் அருகே ஸ்டார் பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து காத்திருந்தவர்களுக்கு வந்த புழு பிரியாணயால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலை,  சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஸ்டார் பிரியாணி ஓட்டல்.

தினந்தோறும் 800 பேர் வரை வந்து சாப்பிட்டு செல்லும் பிரபலமான இந்த ஓட்டலில் காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் 4 சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர்.

சிக்கன் பிரியாணி வரும் என காத்திருந்த இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவகளுக்கு வந்த சிக்கன் பிரியாணிவில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபொழுது, கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர் ஓட்டல் ஊழியர்கள். இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஓட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க எதிர்திசையில் பேசிய மேனேஜர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா? சாப்பிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியாத கூறப்படுகிறது

worm-in-chicken-biriyani-at-star-biriyani-hotel
worm in chicken biriyani at star biriyan hotel

”பிரபலமான ஹோட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிட வருகின்றனர். அவர்களின் உடலுக்கு ஊறுவிளைக்கும் உணவை கொடுப்பது மட்டுமல்லாமல், திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Spread the love
Related Posts