இன்று காலை முதல், எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது. இதுகுறித்து எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
முன்பு டுவிட்டர் என்று இருந்த நிறுவனத்தின் பெயர் எக்ஸ் என்று மாற்றம், ப்ளு டிக் வாங்குவதற்கு பணம் என பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வந்த நிலையில், இதற்கு எதிராகவும், ஆதரவாகவும், பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல், எக்ஸ் சமூக வலைதள செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கோளாறு குறித்து எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கடந்த சில நிமிடங்களாக சமூக வலைதளமான எக்ஸ் முடங்கியுள்ள நிலையில், இணையவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது அடிக்கடி எக்ஸ் வலைதளம் இது போன்ற செயலிழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.