கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 5000 வழங்கப்படும் எனப் புதுச்சேரி முதலமைசர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பலவராக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழக மாவட்டங்களிலும் புதுவையிலும் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பல சாலைகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில், பயிர்கள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைசர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணமாக சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு ரூ.5000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மஞ்சள் அட்டைதாரர்கள் தங்களுக்கும் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைசர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.