Yellow warning for heavy rain : எந்த ஆண்டும் இல்லாமல் இந்த 2024ஆம் ஆண்டு கோடை வெளியிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
கொளுத்தும் வெளியிலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலையில், மக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : என்ஜினீயரிங் கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைப்பு!
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் எந்த பகுதிக்கும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சண்டிகார், டெல்லி, அரியானா, கிழக்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் புழுதி புயலுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது Yellow warning for heavy rain.
இதையும் படிங்க :கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு.. வெளியான முக்கிய தகவல்!