நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாலமணிகண்டன் மற்றும் பரணிகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர் .
பாலசுப்ரமணியன் தன்னுடைய அக்கா மகள் லாவண்யாவை மூத்த மகன் பாலமணிகண்டனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1 மாதமாக பாலமணிகண்டன் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாலமணிகண்டனின் மனைவி கோபித்துக்கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஊர் திரும்பிய லாவண்யா தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு திருப்பூர் சென்றுவிட்டார்.
பாலமணிகண்டனுக்கு தெரியவரவே தன்னுடைய குழந்தையை தந்தை பாலசுப்பிரமணியன் மனைவியுடன் அனுப்பி வைத்ததாக கருதி, தன்னுடன் மனைவி தன்னுடன் வாழதற்க்கு தந்தையே காரணம் என எண்ணி 2 மகன்களான பாலமணிகண்டன் பரணிகுமார் மற்றும் தன்னுடைய அக்கா மகன் சீனிவாசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தோட்டத்தில் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் 2 மகன்கள் உட்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.