தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற ( theni ) இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுசேரில் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முரையில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து அணைத்து மாநிலங்களும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் ஜூன் 4 ஆம் தேர்தல் முடிவுகள் வெளியிடபடும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிந்த இடங்களில் வோட்டிங் மிஷின்கள் அனைத்தும் STRONG ROOM என்று அளிக்கப்படும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Also Read : திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பலத்த பாதுகாப்புடை இருக்கும் இந்த இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் யாராலும் செல்ல முடியாது . இப்படி இருக்கும் சூழலில் தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரி, பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.