May 1 Gold Rate : மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை சரசரவென சரிந்து இன்று ஒரு சவரன் ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
இதையும் படிங்க : கோடை வெயில்.. நீர்மோர் கொடுப்போம் – தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
இதையும் படிங்க : மெக்சிகோவில் பேருந்து விபத்து… 18 பேர் பலி, 32 பேர் காயம்…விபத்துக்கான காரணம் என்ன?
நேற்று (30.04.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,750க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (01.05.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ 6,635க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.53,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (30.04.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,529க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,232க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (01.05.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.94 குறைந்து ஒரு கிராம் ரூ.5,435க்கும், சவரனுக்கு ரூ.752 குறைந்து ஒரு சவரன் ரூ.43,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.87.00-க்கும் ஒரு கிலோ ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (May 1 Gold Rate).
இதையும் படிங்க : திடீர் சரிவில் தங்கம் விலை!