ராஜஸ்தானில் சுரூ மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே அவரது பெரியப்பா மகன் வசித்து வந்துள்ளார்.
அந்த நபர் சகோதரர் உறவு முறை என்பதால் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்,
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 2021 டிசம்பர் மாதம் வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.
அதன்படி, இந்த விஷயத்தை வெளியே யாரிடமாவது கூறினால் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பலமுறை பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இப்படியே சுமார் 2 ஆண்டுகளாக பயத்துடன் அந்த இளம்பெண் அண்ணின் பாலியல் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களா அந்த இளம்பெண் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், அவரின் தாயார் பெண்ணிடம் மீண்டும் மீண்டும் விசாரித்த நிலையில், தனக்கு நேர்ந்த அவலத்தை தாயிடம் கொட்டி தீர்த்துள்ளார் அந்த இளம் பெண்.
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் உடனடியாக பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.