கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரும் வழியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது , பெண் காவலர்களை கீழ்த்தனமாக பேசியது, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இப்படி கோவை சிறைக்கும் சென்னை சிறைக்கும் சவுக்கு சங்கரை போலீசார் மாறி மாறி அழைத்து வந்து விசரனை மேற்கொண்டு வருவதால் தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என அவ்வப்போது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் குரல் கொடுத்ததை இணைய தளங்களில் நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் போலீசார் இன்று நீலகிரியில் இருந்து ஆத்தூர் வழியாக வேன் மூலம் சவுக்கு சங்கரை சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.