பிப்ரவரி 2 : மாத தொடக்கத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதுதான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.

மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையியில் விற்க எளிதானது.
தங்கம் விலை : நேற்று (01.01.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,880-க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,040-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : பட்டியலின மாணவி சித்ரவதை : கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,800-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (01.01.24), 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,817க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,825-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.80க்கும் ஒரு கிலோ ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : saattai duraimurugan வீட்டில் NIA raid – சிக்கிய ஆவணம்?-நேரில் ஆஜராக சம்மன்
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (பிப்ரவரி 2).