பிப்ரவரி 28 : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க : 2024 February 28 : இன்றைய ராசி பலன்!!
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (27.01.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,815-க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (27.01.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,763க்கும் சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.38,104க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,759-க்கும் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.75.50க்கும் ஒரு கிலோ ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : Port projects | தமிழகத்தில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!
இன்று, வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.75.50க்கும், ஒரு கிலோ ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (பிப்ரவரி 28).