பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைக்காக கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 1ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019″ம் ஆண்டு நடைபெற்ற தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்
கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த 2021 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததுடன் அதில் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க : வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி – திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!
அதே வேளையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள சூழலில் கடந்த ஒரு வருடமாக வீடியோ அகான்பிரன்ஸிங்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே குற்றவாளிகள் 9பேரையும் நேரில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ்,
மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு,
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகிலா நீதிமன்ற தனி நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக வெளியான வீடியோக்கள் மற்றும் ஏற்கனவே சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்,
சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைக்கு பின் மீண்டும் வரும் மார்ச் 1ஆம் தேதி 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.
சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு ஒன்பது பேரும் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.