தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதையும் படிங்க : https://itamiltv.com/gold-investors-check-today-january-11th-gold-and-silver-price-in-chennai-sawaran-fell-by-rs-80-in-a-single-day/
இதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.
மேலும், மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தொடர்மழையால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு, தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 538 கன அடி நீர்வரத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு, வினாடிக்கு 2,547 கன அடி தண்ணீர் வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745320158783246754?s=20
அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
தற்போது தாமிரபரணி ஆற்றில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/sharukh-speech-about-director-mani-rathnam/
எனவே, கரையோர பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை,
தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என கலெக்டர் லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.