நுங்கில் உள்ள அதிசய நன்மைகள் : கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் சத்தான பொருட்களில் ஒன்றான, ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கு பல நூற்றாண்டுகளாக ஒரு சத்தான உணவாக இருந்து வருகிறது.
இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி நமக்கு போதிய தெளிவில்லை. வைட்டமின் ஏ, பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது.
இதையும் படிங்க : சைதாபேட்டை வடகறி.. மொறு மொறு தோசையோடு ட்ரை பண்ணி பாருங்க பிரெண்ட்ஸ்..!!
வெப்பத்தைத் தணிக்க உதவும் நுங்கின் சில நம்ப முடியாத அற்புத நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நுங்கில் உள்ள அதிசய நன்மைகள் :
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நுங்கு சாப்பிடுவது நல்ல பலன் தரும். இதில் நிறைய தண்ணீர் உள்ளதால் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவுடனேயே வைத்திருக்க உதவுகிறது.
2. குறிப்பாக கோடைகாலத்தில் அதிகமாக ஏற்படும் சின்னம்மை நோய்க்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும். சின்னம்மை உள்ளவர்கள் இந்த நுங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3. தோல் நோய்களை போக்கவும், சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தவும் உதவுகிறது.
4. இதை வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவர குணமாகும். இதேபோல் அம்மை, அக்கி கொப்பளங்களுக்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம்.
5. கர்ப்ப காலத்தில் நுங்கினை சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது. அனைத்து வயிற்று நோய்களுக்கும் சிறந்த இயற்கையான மருந்தாக செயல்படுகிறது.
6. கோடை காலத்தில் ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி நுங்கு அதிகம் சாப்பிடுவது தான்.
7. மோருடன் இளம் நுங்கு, உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
8. பெண்களுக்கு உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப் போக்கு சரியாகும்.
9. நுங்கின் சிறந்த ஆரோக்கிய நன்மை என்னவென்றால், பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் நச்சுகளை வெளியேற்றுவதால், கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து குணபடுத்துகிறது.
10. மார்பக புற்றுநோய் கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ‘பைட்டோ கெமிக்கல்ஸ் அந்தோசயனின்’ நுங்கில் அதிகம் உள்ளன.