பத்ம விபூஷண் விருது : கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு,
குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது-க்கு தேர்வானவர்கள் :
வைஜெயந்திமாலா – கலை(தமிழகம்)
பத்மா சுப்ரமண்யம் – கலை(தமிழகம்)
சிரஞ்சீவி – கலை(ஆந்திரா)
வெங்கையா நாயுடு – பொது விவகாரங்கள்(ஆந்திரா)
பிந்தேஷ்வர் பதக் – சமூக சேவகர்(பீகார்)
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு உட்பட பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கலர்ஃபுள் பீட்ரூட் சாம்பார்.. சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும்!!
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்கள்,
நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இதையும் படிங்க : இன்று மாலை சென்னை வருகிறது பவதாரிணி உடல்.
அதே போல, பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கும் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன் அவர்கள், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள்,
எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம் அவர்கள், மருத்துவர் நாச்சியார் அவர்கள் உட்பட
மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.