சிங்கப்பூரின், இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் டெலியோஸ் – 2, லுமிலைட் – 4 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 (pslv c55) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி சரியாக இன்று பிற்பகல் 2.19 மணி அளவில் பிஎஸ்எல்வி சி-55 (pslv c55) ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும், திட்டமிட்டபடி டெலியோஸ் – 2, லுமிலைட் – 4 ஆகிய இரு செயற்கைக்கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து, சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைகோள்கள் பூமி ஆய்வு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுமார், 741 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 (TeLEOS-2) என்ற செயற்கைக்கோள் புவி கண்காணிப்பிற்காகவும், 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 (LUMILITE-4) என்ற செயற்கைக்கோள் கடல் பாதுகாப்பிற்காகவும் அனுப்பப்பட்டுள்ளன.